அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கதினரால் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் பேரணி ஒன்று இடம்பெற்றது…
இவ் பேரணியானது இன்றைய சர்வதேச மனித சுகந்திர தினத்தினை கறுப்புதினமா கொண்டு குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது… இவ் பேரணியானது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது…
குறித்த பேரணியானது தம்பிலுவில் மத்திய சந்தையில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்தது.
இவ் பேரணியானது அம்பாறை மாவட்ட வலீந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்தின் செயலாளருமான தம்பிராசா செல்வராணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது….
இப்பேரணியில் மனித சுகந்திரம் இல்லாத நாட்டில் மனித சுகந்திரதினம் எதற்கு காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு முடிவு இல்லையா மற்றும் காணாமல் ஆக்க செய்தவர்களுக்கு தண்டனை இல்லையா என கோஷங்கள் எழும்பிய வாறு இப் பேரணி இடம்பெற்றது…
இவ் பேரணியில் வலீந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது…
