அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் கடமையேற்பு

பாறுக் ஷிஹான்

அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக (ACLG) நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எஸ்.எம்.அஸீம் செவ்வாய்க்கிழமை (21) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்களினால் இவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ. ரி.எம். றாபி. அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற நிலையில் அப்பதவிக்கு மேலதிகமாகவே கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரினால் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 2019ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.எஸ்.எம்.அஸீம்இ 2020 மார்ச் மாதம் தொடக்கம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன் 2022 ஜனவரி மாதம் தொடக்கம் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி வருகின்றார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர்இ அஹமட் சிராஜுதீன் மற்றும் ஜஹ்புல் அறபியா தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *