அரச மற்றும் அரை அரச நிறுவனங்களில் தொழில் புரியும் 50 வயதிற்கு மேற்பட்ட உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமானது அம்பாறை மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.மகேஸ்வரன் அவர்களின் ஒருங்கிணைப்பில் அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர்களான எஸ்.ஜெகராஜன் மற்றும் எச்.எஸ்.என்.டி.சொய்சா சிறிவர்த்தன ஆகியோர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக அம்பாறை மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் லேனுசா அவர்களும் அம்பாறை மாவட்ட ஓய்வூதிய உத்தியோகத்தர் சாலிஹீன் மற்றும் அம்பாறை மாவட்ட உளவள ஆலோசகர் எஸ்.மனூஸ் அபூபக்கர் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் 115 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளர்களால் ஓய்வூதியத்திற்கான கோவை(File) தயார் செய்வது எப்படி எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் ஆய்விற்கு பின் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் அக்காலப்பகுதியில் ஏற்படும் நோய்கள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் உள ஆலோசனைகளையும் வழங்கி தெளிவுபடுத்தினார்கள்.





