மட்டக்களப்பு செங்கலடி குமாரவேலியர் கிராமத்தில் வீடொன்றின் முன்றலிலுள்ள இருந்த தென்னை மரத்தில் இடி மின்னல் தாக்குதல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளது.!
காலநிலை மாற்றத்தால் இடிமின்னல் ஏற்படலாம் அவதானமாக இருங்கள்.
கிருஷ்ணகுமார்
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு நபர்களின் சடலங்கள் நேற்று (26) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புலிப்பாஞ்சிக்கல் மற்றும் கோராவெளி பகுதியில், சனிக்கிழமை (25) மாலை இரண்டு நபர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முன்பே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த இந்த நிலையில், கண்ணகி அம்மன் கோயில் வீதி கிரானைச் சேர்ந்த கா.குருபரன் (53) மற்றும் திகிலிவெட்டை சந்திவெளியைச் சேர்ந்த மா.விநாயகமூர்த்தி (71) எனும் முதியவர்கள் வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
புலிப்பாய்தகல் கோராவெளி பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரின் சடலங்களும் நேற்று (26) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் உறுதி செய்தனர்.
இவர்களின் மரண விசாரணைகள் தொடர்ந்தும், சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
முன்னதாக, வெள்ளக்காலப்பகுதியில் அத்துமீறிய வெள்ளம் காரணமாக பல உயிரிழப்புகள் பதிவாகியிருந்தாலும், இங்கு முறையான பாலம் இல்லாமையினால் தொடர்ந்து பலவிதமான பேரழிவுகள் ஏற்படுவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடி குமாரவேலியர் கிராமத்தில் வீடொன்றின் முன்றலிலுள்ள இருந்த தென்னை மரத்தில் இடி மின்னல் தாக்குதல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளது.!
காலநிலை மாற்றத்தால் இடிமின்னல் ஏற்படலாம் அவதானமாக இருங்கள்.
Popular
© 2025 | MM Media Network (Pvt) Ltd. All Rights Reserved.