தேசிய ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் கடந்த காலத்தில் இனவாதத்தின் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அவ்வாறான நிலைமைகள் ஏற்படாது எனவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் வெளிநாட்டுவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
இனவாத ரீதியில் அபிவிருத்திகள் தட்டிப்பறிக்கப்படும் என்ற எந்த விதமான அச்சமும் சந்தேகமும் எந்த இனத்திற்கும் தேவையில்லையெனவும் சரியான வகையில் வளங்கள் பங்கீடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இனவாத ரீதியாக அபிவிருத்திகள் தட்டிப்பறிக்கப்படாது –உறுதி வழங்கிய பிரதியமைச்சர்
Date: