இறக்காமம் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் நேற்று (04) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கல்முனை விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இறக்காமம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மற்றும் கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *