இஸ்ரேலுக்கு எதிராக தனது புத்தகத்தில் கவிதைகள் சில எழுதி இருந்தன என்ற குற்றச்சாட்டில் – ஏறாவூர் பொலிசாரால் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது.
காரைதீவு மாவடிப்பள்ளியில் இருந்து இரத்தினபுரி செல்வதற்காக பஸ் வண்டியில் வந்திரங்கி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் ஏறாவூர் புகையிரத நிலையம் செல்ல வழி கேட்ட இளைஞனே சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சந்தேகத்திற்கிடமான பயணப்பை வைத்திருந்தத நிலையில் அதை பரிசோதனை செய்த போதே குறித்த கவிதையை பொலிசார் அவதானித்தாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர் எனவும், குறித்த கவிதை பல ஆண்டுகளுக்கு முன் தான் எழுதியுள்ளதுடன், அவர் வைத்திருந்த குறிப்பு புத்தகத்தில் பல வகையான கவிதைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கு எதிராக கவிதை எழுதிய இளைஞன் ஏறாவூரில் கைது
Date: