கிருஷ்ணகுமார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் புதன்கிழமை (22) காலை 7 மணிவரையில் 31அடி 8 அங்குலமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அக்குளத்தின் 4 வான்கதவுகள் 5 உயரத்தில் புதன்கிழமை(22) திறந்து திறந்து விடப்பட்டுள்ளதாக உன்னிச்சைகுளத்தின் திட்ட முகாமையாளர் செ.மேகநாதன் தெரிவித்தார். இதனால் செக்கனுக்கு 3425 கன அடி வெளியேற்றப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அப்பகுதியை அண்மித்த தாழ் நிலங்கள் பெரிதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இதனால் உன்னிச்சை குளத்தை அண்மித்த பகுதியில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அவர் மேலும் வேண்டுகோள விடுத்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நவகிரிக்குளத்தின் நீர்மட்டம் 30அடி 9அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 16அடி 10 அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 19 அடி 7அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 8அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 5அங்குலம், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 12 அடியாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.