உயிரிழந்த நிலையில் யானை மீட்பு

கிருஷ்ணகுமார்

மட்க்களப்பு கொக்கட்டிச்சோலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தாந்தாமலை போலீஸ் காவலரனுக்கு பின்னால் உள்ள வாய்க்கால் பகுதியிலே உயிரிழந்த நிலையில் இந்த யானை மீட்கப்பட்டுள்ளது.

இவ் யானைக்கு சுமார் 30 தொடக்கம் 35 வயது இருக்கும் எனவும் வயல் பகுதிக்குள் சேதுமாக்கிய பின்னரே இந்த யானை இறந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து குறித்த பகுதிக்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வந்து பார்வையிட்டதன் பின்னர் யானையின் உயிரிழப்பு தொடர்பாக கொக்கட்டிச்சோலை போலீஸ் நிலையத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கால்நடை வைத்தியர்கள் இறந்த யானையை பரிசோதனை செய்த பின்னர் அதனை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

யானை உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் கால்நடை வைத்திய பிரிவின் பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Image Not Found
Image Not Found

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *