ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) “இளம் கலைஞர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

Date:

ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) “இளம் கலைஞர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கூத்து ஆற்றுகைக்காக தங்கவேல் சுமனுக்கு குறித்த இளம் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்காக இலக்கிய விழா இன்று (11.12.2024) புதன்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் 2022,2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட பல துறைகள் சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன்போது தங்கவேல் சுமன் சிறு வயது முதல் தற்போது வரை கூத்துக்கலையில் சிறப்பாக ஈடுபட்டுவருகின்றதன் அடிப்படையில் இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விளாவட்டவான் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் சுமன் தற்போது யாழ்ப்பாணத்தில் கெப்பிட்டல் தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.W.G திசாநாயக்க, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...