ஊடகவியலாளர் மீது தாக்குதல்; 6 சந்தேக நபர்கள் கைது

Date:

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கி, ஊடக உபகரணங்கள் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று (2) இடம்பெற்றுள்ளது.

விவசாயிகளிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் அச்சல உபேந்திர (வயது-50) மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளரின் புகைப்படகருவி தொலைபேசி ட்ரோன் கமெரா ஆகியவை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் செயற்பட்டு ஊடகவியலாளர் வசம் இருந்து சந்தெக நபர்களினால் அபகரித்து செல்லப்பட்ட ட்ரோன் கமெரா புகைப்படகருவி மற்றும் தொலைபேசிகள் மீட்கப்பட்டன.

அத்துடன் ஆறு சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனம் என்பன மீட்கப்பட்டுள்ளன. இது தவிர தாக்குதலுக்குள்ளான குறித்த ஊடகவியலாளர் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறப்பு

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய...

மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை

மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்த...

புதிய கட்டிடம் திறந்து வைப்பு

சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைப்...