கடல் கொந்தளிப்பு காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடியாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மீனவர்கள் அவர்களது தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எதுவித வருமானமும் இன்றி தாம் கஷ்டப்படுவதாகவும் நிவாரணங்களை வழங்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மாவட்டத்தில் உள்ள மீனவர்களது தோணிகள் வள்ளங்கள் தற்போதும் கடப் பேரலையிலிருந்து காப்பாற்று முகமாக கட்டி வைப்பதை காணக் கூடியதாக உள்ளது

தொடர்ந்தும் கரையோர பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படுவதனால் மீனவர்கள் அதிக நாட்கள் தொழில் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தினால் தங்களுக்கு நிவாரணங்கள் வழங்க உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பு காரணமாக கடலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய நிலையை உரிய அதிகாரிகள் பார்வையிட்டு அரசாங்கம் தங்களது நிலைமைகளை கருத்தில் கொண்டு தமக்குரிய உதவிகளை வழங்குமாறு பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மீன்பிடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மீனவர்களின் கடற்கரை பகுதிகள் தற்போது வெறுச்சோடி காணப்படுவதை காணக் கூடியதாக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *