திருகோணமலை,கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் நான்கு வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. .
இதில் நான்கு கதவுகளும் ஒரு அடிஅளவுக்கு திறக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் குளத்தின் தற்போதைய மொத்த நீரின் கொள்ளளவு 114,000 ஏக்கர் அடியாகும்.
இந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தற்போது நீரின் கொள்ளளவு 90000 ஏக்கர் அடியாக உயர்ந்துள்ளது
இதனால் 700 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றது
தற்போதுள்ள குளத்தின் நீர்மட்டத்தை குறைப்பற்க்காகவும் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.