மட்டக்களப்பு கறுவப்பங்கேணியில் இயங்கிவரும் செயற்பாட்டுக்குழுவும் சிறுவர் சிற்பிகள் கழகமும் இணைந்து நடாத்திய ஜேசு கிறிஸ்து பிறப்பின் ஒளிவிழா நிகழ்வு இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
தொழில்சார் உளநல உதவி நிலைய வழிகாட்டலின் கீழ் இயங்கி தற்போது தனித்துவமாக இயங்கி ஸ்ரீவரும் கருவப்பங்கேணி செயல் பாட்டுக்குழுவானது பல்வேறு கலைகலாசார மேம்பாட்டு பணிகள் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவருகின்றது.
இதன் கீழ் இந்த ஒளிவிழா நிகழ்வு நடைபெற்றதுடன் மதங்களுக்கு அப்பால் மனிதத்தினை ஒன்றிணைக்கும் வகையில் அனைத்து மதச்சிறார்களும் இணைந்து இந்த நிகழ்வினை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.
மட்டக்களப்பு எல்லை வீதி மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் செயற்பாட்டுக்குழுவின் தலைவர் ஜாகப்பர் தேவதர்சினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் முறைசாரக்கல்வி பிரிவின் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.தயானந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் ஏ.ஜெயானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
































