
மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் பிரதான வீதியோரத்தில் நின்ற முச்சக்கர வண்டியொன்றின் மீது திடீர் என தீப் பிடித்துள்ளது.
சற்றுமுன் 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீரை ஊற்றி தீயை அணைக்க அங்கிருந்தவர் முயற்சித்தபோது , தீ ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இத் தீவிபத்து எதனால் இடம்பெற்றது தொடர்பில் அறியமுடியவில்லை என முச்சக்கர வண்டி உரிமையாளர் கவலை தெரிவித்தார்.

