கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து கோறளைப்பற்று அரச உத்தியோகஸ்தர்களினால் கவன ஈர்ப்பு போராட்டம்

Date:

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமானவர்களை கைது செய்து  சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று 23/12 திங்கட்கிழமை கவன ஈர்ப்புப் போராட்டம் அமைதியான முறையில், முன்னெடுக்கப் பட்டிருந்தது.கோறளைப்பற்று அரச உத்தியோகஸ்தர்களினால்கடந்த 20/12 வெள்ளிக்கிழமை கடமை நிமித்தம் தனது பிரதேசத்திற்கு சென்று வரும் போது சில நபர்களினால் தாக்கப்படட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தாக்கப்பட்ட நபர்களை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை என கூறி கண்டன ஆர்ப்பாட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களினால் இடம்பெற்றது இதன்போது
” கைது செய் கைது செய் தாக்கிய வரை “
“அரச உத்தியோகஸ்தரின் பாதுகாப்பை உறுதி செய் “
“கடமையை செய்தால் உயிருக்கு அச்சுறுத்தலா “
அரச பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு எப்போது தீர்வு
போன்ற வசனங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதன்போது வருகை தந்த வாழைச்சேனை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி
குறித்த சந்தேகநபரை போலீசார் தேடிக் கொண்டிருப்பதாகவும் இதுவரை அவர்களை கைது செய்யப்படவில்லை என்றும் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார் .
பொஸிசாரின் உறுதிமொழியை அடுத்து போலீஸ் நிலைய பொறுப்பாதிகரியிடமும் பிரதேச செயலாளரிடமும் மகஜர் கையளித்து விட்டு கலைந்து சென்று தங்கள் கடமைகளை செய்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கிருஷ்ணகுமார் இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு...

முன்னால் அமைச்சர் கைது: இளைஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை...

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு

(பாறுக் ஷிஹான்) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத்...