கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழத்தின் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை (14) இரவு செங்கலடியிலிருந்து பல்கலைக்கழக விடுதிக்கு முச்சக்கரவண்டியில்
பிரயாணித்து, பல்கலைக்கழகத்தின் முன்னாள் உள்ள வீதியை கடக்கும் பகுதியில் எதிர்பக்கமாக கொழும்பு நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்
மோதியதில் முச்சக்கரவண்டியில் பிரயாணித்த பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் 3 பேர் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதோடு ஒருவர்
உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்தவர்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.