கோடீஸ்வரன் எம்.பி.யின் அயராத முயற்சியினால் வழமைக்கு திரும்புகின்றது குடிநீர் விநியோகம் -நேரில் சென்று ஆய்வு

Date:

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு உட்பட சில பிரதேசங்களுக்கு அனர்த்தம் காரணமாக தடைப்பட்டிருந்த குடிநீர் விநியோக நடவடிக்கைகள் இன்று(07) இரவு அல்லது நாளை(08)காலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நைனாகாடு பகுதியில் நான்கு இடங்களில் நீர்விநியோக குழாய்கள் உடைப்பெடுத்ததன் காரணமாக நீர் விநியோக நடவடிக்கைகள் கடந்த 12நாட்களுக்கு மேலாக பல பகுதிகளுக்கான குடிநீர்விநியோகம் தடைப்பட்டிருந்தது.
இதன்காரணமாக காரைதீவு, மாளிகைக்காடு,நிந்தவூர்,சாய்ந்தமருது ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் தடைப்பட்டிருந்தததுடன் மக்கள் பெரும் கஸ்டங்களையும் எதிர்நோக்கிவந்தனர்.
இந்த நிலையில் குறித்த உடைவினை சீர்படுத்தும் செயற்பாடுகள் மந்தகதியில் நடைபெற்றுவந்த நிலையில் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனால் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த உடைவினை சீர்செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருந்தன.
இன்று நைனாகாடு பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறித்த பணிகளை பார்வையிட்டதுடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் கைதர் அலி,பொறியியலாளர் மயூரன் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் குடிநீரை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தினார்.
தற்போது குறித்த பகுதியில் குடிநீர் விநியோக குழாய்களின் உடைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலை முதல் குடிநீர் விநியோகத்தினை செய்யமுடியும் என அதிகாரிகள் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கிருஷ்ணகுமார் இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு...

முன்னால் அமைச்சர் கைது: இளைஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை...

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு

(பாறுக் ஷிஹான்) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத்...