செட்டிபாளையத்தில் பஸ்சில் மோதிய அம்பியுலன்ஸ் வண்டி -மூவர் காயம்

Date:


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் அம்பியுலன்ஸ் வண்டியும் இலங்கை போக்குவரத்துசபை பஸ் வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியிலேயே இந்த விபத்து இம்பெற்றுள்ளளது.
களுவாஞ்சிகுடி நோக்கிவந்துகொண்டிருந்த அம்பியுலன்ஸ் வண்டியானது கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துசபை பஸ் மீது மோதியுள்ளது.
இதன்போது அம்பியுலன்ஸ் வண்டி சாரதியும் அதில் பயனித்த பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான இந்த வாகனம் களுவாஞ்சிகுடி பகுதிக்கு கடமை நிமித்தம் சென்றபோதே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக பஸில் பயணித்தவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...