மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் அமைக்கப்பட்ட அந்நூர் வீட்டுத்திட்டமும் பள்ளிவாயலும் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
பைத்துஸ் ஸக்காத் அமைப்பின் ஒழுங்கமைப்பில் குவைத் நாட்டின் அந்நஜாத் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் இலங்கையின் சமூக சேவைப்பரப்பில் தொழிற்படும் அந்நூர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த வீடமைப்பு மற்றும் பள்ளிவாயல் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
தளவாய் பிரதேசத்தில் ஏறாவூர் பைத்துஸ் ஸக்காத் அமைப்பினால் வழங்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்ட பள்ளிவாயல், மற்றும் பாடசாலைக்கட்டிடம் என்பவை அடங்கலாக 30 வீடுகளைக்கொண்டதாக இந்த இந்த வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் குவைட் மற்றும் உள்நாட்டில் நாட்டில் செயற்படும் தொண்டு நிறுவனப்பிரதிநிதிகளுடன் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும் விசேட அழைப்பின் பேரில் கலந்து சிறப்பித்தார்கள்.
குறித்த வீட்டுத்திட்டம் அமைவதற்காக மிக அவசியமாக இருந்த வீதி அமைப்புப்பணிகளை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக அலி ஸாஹிர் மௌலானா மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், குறித்த பகுதியில் மேலும் 100 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத்திட்டமொன்றை விரைவில் ஆரம்பிக்க குறித்த நிறுவனங்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.















