திருகோணமலை கடலில் மிதந்து வந்த சிறிய ரக விமானம்

Date:

திருகோணமலை கடலில் சிறிய ரக விமானம் ஒன்று மிதப்பதை கண்ட மீனவர்கள் குழு அதை மீட்டு வந்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்..

கரையில் இருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் இந்த சிறிய ரக விமானம் இருந்துள்ளது.

​​இது இலக்கு ஆளில்லா விமானம் என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே தெரிவித்தார்.

இந்த வகை விமானம் 2020 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

விசாரணையில் சுமார் 40 கிலோ எடையுள்ள இதுபோன்ற விமானங்கள் இந்திய விமானப்படையின் பயிற்சி அமர்வுகளில் இலக்குகளாகப் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

எனினும் இம்முறை கண்டுபிடிக்கப்பட்ட விமானம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும் கருத்து தெரிவித்த விமானப்படை பேச்சாளர், விமானம் சேதமடையவில்லை என்றும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு

பாறுக் ஷிஹான் அம்பாறை உள்ளூராட்சி மன்றங்களில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை...

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய...

தென் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19)...

பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய...