திருகோணமலை மாவட்ட தொழிற்சந்தை – 2024

திருகோணமலை மாவட்ட செயலக தொழில் நிலையத்தின் ஏற்பாட்டில் மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் 2024 ஆம் ஆண்டுக்கான தொழிற்சந்தை இன்று (10) மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் தொழில் வழங்குனர்களாக தனியார் நிறுவனமும் உள்ளூர் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் பல தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ். குருகுலசூரிய, துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *