திருகோணமலை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக ஹேமந்தகுமார நியமனம்

Date:

திருகோணமலை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர அதிகாரி டபிள்யு. ஜி. எம். ஹேமந்தகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், கடந்த 2003ஆம் ஆண்டு செப்டெம்பர் 01ஆம் திகதி இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, தெஹியத்தகண்டிய உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலாளர், மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சின் உதவி செயலாளர், மத்திய மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர், மத்திய மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் ( பதில் கடமை), ஹதரலியத்த மற்றும் தும்பன பிரதேச செயலாளர் ஆகிய பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

அத்துடன், அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட முன்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக இவர் கடமையாற்றியுள்ளார்.

இவருக்கான நியமனத்தினை அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று...

பொத்துவிலில் மணல் அகழ்வு தடங்கல்களை தீர்க்க அரசாங்க அதிபர் உடனடி நடவடிக்கை

ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்....

சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு

சம்மாந்துறை பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள்...

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எச். முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட...