திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஜனவரி முதல் வாரத்தில் திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் அளித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட சம்மாந்துறை பொலிஸார் பொத்துவில்
பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் உட்பட கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி
கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *