தென்னைப் பயிர்ச்செய்கையில் தற்போது காணப்படும் சவால்கள் பற்றிய கலந்துரையாடல்

தென்னைப் பயிர்ச்செய்கையில் தற்போது காணப்படும் சவால்கள் பற்றிய கலந்துரையாடல் டெக்னோபார்க், மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் டெக்னோபார்க்,
Centre for Multidisciplinary மற்றும் Eastern chapter, SLASS அத்துடன் Chamber of Commerce, Batticaloa இணைந்து
ஒழுங்கு செய்திருந்தனர்.

இந்நிகழ்விற்கு கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், மயிலம்பாவெளி, மட்டக்களப்பு தென்னனப்பயிர்ச்செய்கை பிராந்திய முகாமையாளர் திரு. P.உதயசந்திரன், பத்ரமுல்ல, கொழும்பு தென்னைப்பயிர்ச்செய்கையின் அதிகாரசபையின் முகாமையாளர் Mr. ஹரிஸ், நாற்றுமேடை அபிவிருத்து சபையின் பிரதி முகாமையாளர் திரு. தேவராஜா வைகுந்தன், டெக்னோபார்க்கின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி பாலேந்திரன், தலைவர் Chamber of commerce பேராசிரியர் ஜெயசிங்கம், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், Chamber of commerce பிரதிநிதிகள் மற்றும் தென்னைப்பயிர்ச்செய்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், தென்னைப்பயிர்ச்செய்கையின் தற்போதைய நிலமைகள் மற்றும் எதிர் நோக்கும் சவால்கள் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. முக்கியமாக யானைகளால் தென்னைப்பயிர்ச்செய்கைக்கு ஏற்படும் பாதிப்பு அதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. அத்துடன் தென்னைப்பயிர்ச்செய்கையின் நோய் பீடைத்தாக்கங்கள் அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் தென்னைப்பயிர்ச்செய்கையின் தற்போதைய நிலமைகள் கலந்துரையாடப்பட்டதுடன் தென்னைப்பயிர்ச்செய்கையாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தனர்.

மயிலம்பாவெளி, மட்டக்களப்பு தென்னனப்பயிர்ச்செய்கை பிராந்திய முகாமையாளர் திரு. P.உதயசந்திரன், பத்ரமுல்ல, கொழும்பு தென்னைப்பயிர்ச்செய்கையின் அதிகாரசபையின் முகாமையாளர் Mr. ஹரிஸ், நாற்றுமேடை அபிவிருத்து சபையின் பிரதி முகாமையாளர் திரு. தேவராஜா வைகுந்தன், கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் நிரஞ்சனா ரொட்னி மற்றும் கலாநிதி பிரசன்னாத் ஆகியோர் வளவாளர்களாக செயற்பட்டனர்.

தென்னைப்பயிர்ச்செய்கை உற்பத்தி கைத்தொழிலை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்தி வரும் மோகன் லசாரஸ் மற்றும் தென்னைப்பயிர்ச்செய்கையாளர் மலர்வண்ணன் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *