இந்துக்களின்மிக முக்கியத்துவமிக்க ஆரூத்திரா தீர்த்தோற்சவம் இன்று காலை ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயங்களில் கடந்த 04ஆம் திகதி தொடக்கம் திருவெம்பாவை நிகழ்வு நடைபெற்றுவந்தது.
அதிகாலை ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்றுவந்ததுடன் வீதிகளிலும் ஆலயத்திலும் திருப்பள்ளியெழுச்சியும் கடந்த பத்து தினங்களாக பாடப்பட்டுவந்தன.
கிழக்கிலங்கையின் பழமையான ஆலயமான மட்டக்களப்பு தேற்றாத்தீவு,கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை ஆலயத்தில் திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டதை தொடர்ந்து திருப்பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் நடராஜ பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து சுவாமி ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மட்டக்களப்பு தேற்றத்ததீவு இந்துமா சமுத்திரத்தில் விசேட பூஜைகளை தொடர்ந்து தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.











