மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, மண்டூர் கமநல சேவை நிலையத்திற்குட்பட்டு பெரும்போக வேளாண்மை செய்கையில் 6000 ஏக்கருக்கும் அதிகமாக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, மண்டூர், வெல்லாவெளி, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை, போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தினால் தாம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இவ்வருட ஆரம்பத்திலேயே வெள்ளமும் தம்மை அதிகம் பாதித்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
