நகையினை மீட்கச்சென்றவரை தகாத வார்த்தைகளினால் அச்சுறுத்திய ஊழியர் –களுவாஞ்சிகுடியில் சம்பவம்

Date:

களுவாஞ்சிகுடியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்குவதற்கும் முற்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபரொருவர் தனது தேவைகளுக்காக களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 19 இலட்சம் ரூபாவுக்கு தங்க ஆபரணங்களை அடகு வைத்திருந்தார்.

அதன் பின்னர், அடகு வைக்கப்பட்ட தனது நகைகளை மீட்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் அந்த நபர் பணத்துடன் அந்நிறுவனத்துக்குச் சென்றுள்ளார்.

அவ்வேளை, செலுத்தவேண்டிய வட்டி மற்றும் முதல் பணத்தொகை தொடர்பில் கணக்குப் பார்த்தபோது, செலுத்தவேண்டிய மொத்தத் தொகை 20 இலட்சம் ரூபா என நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

அதற்கு, அந்த நபர், தான் 20 இலட்சம் ரூபா பணம் கொண்டுவந்துள்ளதாக கூறி நகைகளை தருமாறு கேட்க, “இப்போது உங்களது நகைகளை தரமுடியாது; ஏன் அவசரமாக மீட்கப் போகின்றீர்கள்; இன்னும் இரு நாட்களுக்கு இருக்கட்டும்; திங்கட்கிழமை தருகின்றோம்” என கூறியுள்ளனர்.

அதற்கு நகை அடகுவைத்த நபர், தனக்கு அவசரமாக நகைகள் தேவை என கூறி நகைகளை கேட்டுள்ளார். இருப்பினும், நிறுவனத்தினர் நகைகளை கொடுக்க மறுத்துள்ளனர். அதன் பின்னர், அந்த நபர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அதனையடுத்து, ஒரு மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் நிறுவனத்துக்குச் சென்று, அடகுவைத்த ஆபரணங்களை கேட்டுள்ளார்.

அப்போது, அங்கு கடமை புரியும் உத்தியோகத்தர் ஒருவர் நகைகளை பெறச் சென்ற நபரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்தோடு, தாக்கவும் முற்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் குறித்த உத்தியோகத்தர்கள் தன்னிடம் மாத்திரமின்றி, இன்னும் பலரிடம் இதேபோன்று அத்துமீறி நடந்துகொண்டதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட நபர், வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை இன்னும் சில நாட்கள் நிறுவனத்தில் வைத்திருந்தால் செலுத்தவேண்டிய வட்டிப் பணத்தொகை அதிகரிக்கும் என்ற நோக்கத்திலேயே நிறுவனத்தினர் நகைகளை திருப்பிக் கொடுக்க தாமதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நிதி நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவிக்கையில்,

தங்களது நிறுவனம் நம்பர் 1 தரத்திலான நிறுவனம் எனவும் அங்கு இவ்வாறான சம்பவம் பதிவாகவில்லையென்றும் இது தொடர்பாக தாம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கிருஷ்ணகுமார் இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு...

முன்னால் அமைச்சர் கைது: இளைஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை...

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு

(பாறுக் ஷிஹான்) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத்...