மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் அரசாங்கம் நிர்ணயத்த விலைக்கு அதிகமாக விற்பனைசெய்யப்படுவதாகவும் அதிகவிலையில் அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டீனா முரளிதரன் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் அரசாங்கம் நிர்ணயித்த விலையில் அரிசிவிற்பனையை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கிளின் சிறிலங்கா ஊடாக வெளிக்குப்பைகள் மட்டுமன்றி அலுவலகங்களுக்குள்ள களைகளும் அகற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் கிராம மட்டங்களின் முன்னெடுக்கும்போது பொதுமக்கள் அதற்கான முழுமையான பங்களிப்பினை வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதுவரை காலமும் உயர்மட்டங்களிலிருந்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுவந்த நிலையில் கிளின் சிறிலங்கா ஊடாக கிராம மட்டங்களிலேயே திட்டங்களை திட்டமிட்டு முன்கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து தினங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு கிளின் சிறிலங்கா தொடர்பான செயற்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்திருக்கவேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
நிர்ணய விலையைவிட அதிகவிலையில் அரிசி விற்பனை –மட்டு.அரச அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை
Date: