பாண்டிருப்பில் போதைபொருள் விற்பனை செய்த சிகை அலங்கரிப்பாளர் கைது


அம்பாறையில் மாவட்டத்தின் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று மதியம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இயங்கும் சிகை அலங்காரம் செய்யும் கடையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த கடையில் 220 மில்லி கிராம் கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளடங்கலாக தன்வசம் வைத்திருந்த சிகை அலங்காரம் செய்யும் 29 வயது சந்தேக நபர் கைதானார்.

மேலும், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *