மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாபெரும் இரத்ததானமுகாம் இன்று நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பாரியளவிலான இரத்தப்பற்றாக்குறையினை குறைக்கும் வகையில் இந்த இரத்ததானமுகாம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினருடன் இணைந்து இந்த இரத்ததானமுகாம் பெரியகல்லாறு இந்துக்கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்;டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துசிறப்பித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக்,பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வண்ணக்கர் கமல்ராஜ்,பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயம் மற்றும் வடபத்திரகாளியம்மன் ஆலய தலைவர் சி.பேரின்பராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இரத்ததான நிகழ்வினை முன்னிட்டும் ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலும் ரீசேட் வழங்கிவைக்கப்பட்டதுடன் இரத்ததானம் செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.














