ஜேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் கிழக்கு மாகாணம் ஒளியேற்றப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் ஒளியூட்டப்பட்ட கிறிஸ்மஸ் மரங்கள் திறந்துவைக்கப்படும் நிகழ்வுகள் நடைபெறுவதுடன் தேவாலயங்களும் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது காண்போரை கவர்ந்துவருகின்றது.
மட்டக்களப்பு பெரியகல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் 2024ஆண்டிற்கான மிக பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டதுடன் தேவாலயமும் மின்குமிழ்களினால் அலங்கரிக்கப்பட்டு திறந்துவைக்கபட்;டது.
கிறிஸ்து பிறப்பு இன்னிசை வழிபாட்டை தொடர்ந்து கல்லாறு திருச்சபையின் சபைக்குரு அருட்திரு எஸ்.திருமறைதாசன் மற்றும் சேகர குருமார்களினாலும் கல்லாறு மெதடிஸ்த திருச்சபை மக்களினாலும் இது திறந்துவைக்கப்பட்டது.
கல்லாறு மெதடிஸ்த திருச்சபை வாலிபர் ஐக்கிய உறுப்பினரான நியூசிலாந்தில் வசித்து கொண்டிருக்கும் றொசானந்த் அவரின் முழு அனுசரணையோடு அமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரம் மெதடிஸ்த திருச்சபை மக்களினாலும் வெகுவிமர்சையாக இனிப்பு பண்டங்கள் வழங்கி கிறிஸ்துவின் பிறப்பை வெளிப்படுத்தும் முகமாக திறந்து வைக்கப்பட்டது
இதில் சிறப்பம்சமாக இந்த கிறிஸ்மஸ் மரத்தினை அலங்கரிப்பதற்கு 30,000த்திற்க்கும் மேற்பட்ட எல்ஈடி மின்குமிழ்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.



