மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், நவம்பர் 10ம் திகதிவரை தேர்தல் சட்டவிதிகளை மீறிய 191 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள தேர்தல் முறைப்பாடுகள் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. இத்தொகையில் இருந்து 121 முறைப்பாடுகள் தீர்வு செய்யப்பட்டு, மிச்சமுள்ள 70 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
மேலும், இதுவரை பெறப்பட்ட முறைப்பாடுகள், தேர்தல் சட்டவிதி மீறலின் அடிப்படையில் சாதாரண தரத்திலானவை என அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.