மட்டக்களப்பில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு

சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு  மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் (17) இடம் பெற்றது.

மட்டக்களப்பு மனித உரிமைகள் பிராந்திய காரியாலய  இணைப்பாளர் எ.எல். இஸ்சதீன் தலையையில் இடம் பெற்ற நிகழ்விற்கு  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

சர்வதேச மனித உரிமை தினம் டிசெம்பர் மாதம் 10 திகதி உலகலாவிய ரீதியில் நினைவு கூறப்பட்டு வருகின்றமையை  முன்னிட்டு ” எங்களுடைய  உரிமைகள் எதிர்காலத்திற்கான தற்போதேய நடவடிக்கை எடுப்போம்” எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மனித உரிமை தின நிகழ்வுகள் இடம் பெற்றது.

இதன் போது விசேட தேவையுடையவர்களின் தொழில் உரிமை பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக இதன் போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள்,  உதவி பிரதேச செயலாளர், வைத்தியர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், பொலிசார், மனித உரிமை உத்தியோகத்தர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *