மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நான்காம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் எஸ்.ஏ.சசிகரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) திகதி இடம் பெற்றது.
இதன் போது மாவட்டத்திற்கான கணக்காய்வு ஐய வினாக்கள் மற்றும் ஒதுக்கிடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்த காலாண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டது.
இக் கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்களப் பணிப்பாளர் சுனில் ஜயசேகர நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந், திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), மாவட்ட பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், பிரதேச செயலாளர்கள், உதவி கணக்காய்வாளர் நாயகம் ஏ.எம்.மாஹிர், கணக்காய்வு அத்தியட்சகர் ரொபட், பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகதார்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




