மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை (13) மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள், மீண்டும் கரைக்கு திரும்பும்போது, முகத்துவாரம் அருகே அவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஒருவரை சக மீனவர்கள் காப்பாற்றியதுடன், மற்றவரை தேடுவதற்கான முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, திராய்மடுவை சேர்ந்த 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர் பின்னர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு
Date: