கிருஷ்ணகுமார்
தூய்மையான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டமானது பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கொண்டுசெல்லும் செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை (17) கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாரிய சிரமதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்துக்கல்லூரியின் அதிபர் கே.பகீரதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சிரமதான பணியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டதோடு பாடசாலை சமூகம், பாடசாலையின் சுற்றாடல் முன்னோடிக்குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ”இயற்கையினை பாதுகாப்போம்” எனும் வகையிலான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.



