மட்டக்களப்பு – இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலயமொன்றிற்கு பெற்றோல் குண்டு தாக்குதல்

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதியில் – பிரதான வீதியில் வர்த்தக நிலயமொன்றிற்கு பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலுப்படிச்சேனை சந்தி பிரதான வீதியில் உள்ள தொலைபேசி மொபைல் போன் – விற்பனை நிலையமொன்றிகு இனம் தெரியாத நபரினால் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த சம்பவம் அருகில் இருந்த கடையின் CCTV. கமராவில் பதிவாகியுள்ளது

தீ சம்பவத்தில் வர்த்தக நிலையம் முற்றாக தீயில் பற்றி எரிந்துள்ளதுடன், விற்பனை நிலையத்தில் இருந்த உபகரணங்களும் தீயில் கருகி உள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *