மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் பாரிய சகிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு! -540000 லீற்றர் கோடா,70000 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டுப் பிரதேசத்தில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவு இன்று அதிகாலை நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பாரிய சகிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் லலித் லீலிரத்னவின் ஆலோசனையில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி எம்.திலங்காவலவின் தலைமையிலான பொலிசார் இத்திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இச்சுற்றி வளைப்பின்போது 3 பொருள்களில் 540000 மில்லி லீற்றர் கோட்,70000 மில்லி லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *