மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 03பேர் உயிரிழந்துள்ளதுடன் 92பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அதிகாரி பணிமனையின் தொற்றுநோய் வைத்திய அதிகாரி ஏ.கார்த்திகா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த தொற்றினால் 60வீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயிகளாகவுள்ளதாகவும் அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எலி காய்ச்சல் -03பேர் உயிரிழப்பு,90மேல் பாதிப்பு – தொற்றுநோய் வைத்திய அதிகாரி ஏ.கார்த்திகா
Date: