கிருஷ்ணகுமார்
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை –மாவட்டத்தில் சாதனை படைத்த இரு மாணவர்கள் வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 180 அதிகூடிய புள்ளிகளைப்பெற்று இரு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலய மாணவன் குணரெத்தினம் ரிஷ்வணன் மற்றும் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாணவி ஜோர்ஜ் ரொசாலினா ஆகியோர் 180 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடம்பெற்றுள்ளனர்.
