
மட்டக்களப்பு – வந்தாறுமூலை கமநல சேவைப்பிரிவில் வெள்ளத்தால் நெற் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு _ வந்தாறுமூலை கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட குளத்துவெட்டை , பெருவெளி மற்றும் பள்ளத்துவெளி ஆகிய விவசாய கண்டங்களில் செய்யப்பட்டுள்ள விவசாயப் செய்கை வெள்ளநீரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பக்தியில் சுமார் 1800 ஏக்கர் நிலப்பரப்பில் நெய் செய்கை செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 1200 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரினால் அழிவடைந்துள்ளது. . விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் செய்கை பழுத்த நிலையில் அழிவடைந்துள்ளதுடன் , குறிப்பாக உறுகாமம் – கித்துள் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் குறித்த பயிர்ச்செய்கை வந்தாறுமூலை பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது.







