மட்டக்களப்பு வாவி எதிர்நோக்கும் ஆபத்து –மீனவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

Date:


இலங்கையில் மிக நீளமான வாவிகளில் ஒன்றாகவும் அதிகளவில் மீன்பிடியார்களைக்கொண்ட வாவிகளில் ஒன்றாகவும் காணப்படும் மட்டக்களப்பு வாவியில் சட்ட விரோத மீன்பிடிகளினால் மீன் இனங்கள் அழிந்து செல்வதை தடுப்பதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மீன்பிடி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் பல்வேறு மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின்போது மட்டக்களப்பு வாவியில் நடைபெறும் சட்ட விரோத மீன்பிடிகள் தொடர்பில் மீனவர்கள் சங்கத்தினால் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
தடைசெய்யப்பட்ட வலைகள் மட்டக்களப்பு வாவிக்குள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக மீன்கள் அழியும் நிலையேற்படுவதுடன் வாவியின் ஓரங்களில் காணப்படும் கன்னாதாவரங்களும் அழிக்கப்படுவதனால் மீன் இனங்கள் உற்பத்திகள் தடுக்கப்படுவதாகவும் இங்கு மீனவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பு வாவி ஓரங்களை சிலர் நிரப்பி ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை அமைப்பதன் காரணமாகவும் சில இடங்களில் வீதிகளை அமைப்பதற்கு வாவிகளை நிரப்புவதன் காரணமாகவும் மீன்கள் அழிவடையும் நிலைமை காணப்படுவதாகவும் மீனவர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் பாவிக்கப்படுவதனால் சிறிய மீன்கள் பிடிக்கப்படுவதனால் மீன்கள் பெருக்கம் குறைவதாகவும் மீனவர்களினால் தெரிவிக்கப்பட்டதுடன் இவை காரணமாக வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் எதிர்கால சமூகத்திற்கு சத்துள்ள மீன்களை வழங்குவதும் தடுக்கப்படுவதாகவும் இவற்றினை தடுத்து மீன் இணங்களை பாதுகாத்து எதிர்கால சமூகத்தற்கு வழங்கும்பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
தங்களது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையிலான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் மீனவர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் சட்ட விரோத மீன்பிடியை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இங்கு மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள பிரதிப்பணிப்பாளர் குரூஸ் மீனவர் அமைப்புகளிடம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மீன்பிடித்துறை அமைச்சரின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டுசென்றுள்ளதாகவும் விரைவில் அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்து மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையெடுக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது நம்பிக்கைவெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு

பாறுக் ஷிஹான் அம்பாறை உள்ளூராட்சி மன்றங்களில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை...

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய...

தென் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19)...

பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய...