மட்டக்களப்பு வாவிக்கரை முனீச் விக்டோரியா நாட்புற வீதிக்கு அருகிலுள்ள வாவியில் இனங்காணப்படாத ஒரு பெண்ணின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மண்முனை வடக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எம். அகமட் சின்னலெப்பை சடலத்தை பார்வையிட்டார்.
பின்னர், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை நடத்தவும், சடலம் இனங்காணப்பட்டால் அதனை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு வழிகாட்டு அறிவுறுத்தல் வழங்கினார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகள் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




