மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் கலை கலாசார இலக்கியப் பெருவிழா.

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் கலை கலாசார இலக்கியப் பெருவிழா -2024

மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் கலாசார விழாவானது (05) பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை வரவேற்றல் இடம் பெற்றதுடன் மங்கல விளக்கேற்றல் ,தமிழ் தாய் வாழ்த்து ,கலாசார கீதம் இசைத்தல் , மாணவர்களால் வரவேற்பு நடனம்,கரகம் ,பிரதேச செயலாளரினால் வரவேற்புரை என்பனவும் இடம் பெற்றதோடு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன அத்துடன் கலைஞர்கள் கௌரவிப்பும் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் ஜஸ்ரினா முரளிதரன் அவர்களும் பிரதேச செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்களும் ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *