இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் . பத்லி ஹிஷாம் ஆதம் இன்று (10)திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவை திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் சந்தித்துள்ளார்.
இதன் போது கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.


