மட்டக்களப்பு ,கரடியநாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
நாககன்னி கோயில் வீதி கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த விக்கினேஸ்வரன் சுஜிதா வயது-18 என்பவரே அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.
.உயர்தரப்பிரிவில் கல்வி கற்று வரும் மாணவி கடந்த சில சினங்களுக்கு முன்னர் தனது தாயாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது தாயார் பாவிக்கும் உயர் குருதியளுத்த்த அதிக மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கரடியநாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவான சடலத்தை பார்வையிட்ட மட்;டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவககுமார் விசாரணைகளின் பின்னர் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு பணித்தார் பின்னர் உறவினர்களிடம் பிரேதம் கையளிக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்