முன்னாள் பிரதியமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் நான்கு வருடத்தின் பின்னர் பிரதியமைச்சரின் சாரதி கைது

Date:

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு வீட்டின் முன்னாள் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.ஜ.டி யினரால் கொலை குற்றத்தின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் வாகனசாரதி ஒருவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (03) உத்தரவிட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு யூன் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து மெய்பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணிகளான ந.கமலதாஸ் மற்றும் வி.சுதர்ஷன் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக பொலிசார் உரிய விசாரணை நடாத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சோபித்து வந்ததுடன் உயிரிழந்தவரின் பெற்றோரும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விசாரணையை கொழும்பு குற்றறத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கொலை குற்றத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்ல இருந்த போது நேற்று வியாழக்கிழமை (2) கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (03) வெள்ளிக்கிழமை சிஜடி யினர் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்து ஆஜர்படுத்தியதையடுத்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுபாப்பு உத்தியோகத்தர் ஒரு வருடத்தின் பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்திருந்ததுடன், 3 வருடத்திற்கு பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் வியாழேந்திரனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு

பாறுக் ஷிஹான் அம்பாறை உள்ளூராட்சி மன்றங்களில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை...

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய...

தென் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19)...

பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய...