மூதூர் பகுதியை சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் CID இனால் விசாரணைக்கு அழைப்பு !

மூதூர் பகுதியை சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி CIDயினரால் விசாரணைக்காக புதன்கிழமை 04ம் திகதி அழைக்கப்பட்டு உள்ளார்.

மூதூர் முன்னம்போடிவெட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி (வயது 60) என்பவருக்கு திருகோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

புதன்கிழமை 04ம் திகதி காலை 10.00 மணியளவில் திருகோணமலை பழைய பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்டு உள்ளது.

அத்துடன் குறித்த நபர் கடந்த பெப்ரவரி மாதம் 07ம் திகதி திருகோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *