வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தின் குறைபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் – எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக பல்வேறு தேவைகளுடன் காணப்படும் மட்டக்களப்பு, வாழைச்சேனை மீன் பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இன்று காலை வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் ஜீ.ஆர். விஜித்கரன் தலைமையில் இச் சந்திப்பு இடம் பெற்றது.

தமது துறைமுக தேவை குறித்து மீனவர்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துரைத்ததையடுத்து அது தொடர்பான அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதற்கான தீர்வு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வாழைச்சேனை துறைமுகத்துக்குற்பட்ட மீன் பிடி அமைப்புக்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் தேவை குறித்து கருத்துக்களை இதன் போது முன்வைத்தனர்.

இதன் போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறப்பு

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய...

மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை

மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்த...

புதிய கட்டிடம் திறந்து வைப்பு

சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைப்...